பிரபோத், பிரவீன் மற்றும் பிராக்ய பாடத்திட்டங்களின் உதவியை நாடுக
இந்தியை மற்ற இந்திய மொழிகளின் உதவியுடன் பயில இங்கே கிளிக் செய்க
இந்தியை மற்ற இந்திய மொழிகளின் உதவியுடன் பயில இங்கே கிளிக் செய்க
கணினித் தொழில்நுட்பம் இன்று நம் வாழ்வின் அநேகமாக எல்லாத்துறைகளையும்,கல்வி மற்றும் மொழிகற்றல் / பயிற்சி உள்ளிட்ட துறைகளையும் வளப்படுத்தியுள்ளது.
கணினித் துறையில் புதிய முன்னேற்றங்கள், செயற்கை மதிநுட்பம் மற்றும் மல்டி மீடியா தொழில்நுட்பங்களுடன் மொழி கற்றல் தொகுப்பை நன்கு வடிவமைப்பது சாத்தியமாக உள்ளது. இதில் ஒலி, ஔி மற்றும் ஔிப்படங்களின் உதவியுடன் ஆற்றல் வாய்ந்த,உரையாடல் தன்மை கொண்ட பயிற்சி முறைமையை வடிவமைக்க இயலும்
கணினித் துறையில் புதிய முன்னேற்றங்கள், செயற்கை மதிநுட்பம் மற்றும் மல்டி மீடியா தொழில்நுட்பங்களுடன் மொழி கற்றல் தொகுப்பை நன்கு வடிவமைப்பது சாத்தியமாக உள்ளது. இதில் ஒலி, ஔி மற்றும் ஔிப்படங்களின் உதவியுடன் ஆற்றல் வாய்ந்த,உரையாடல் தன்மை கொண்ட பயிற்சி முறைமையை வடிவமைக்க இயலும்
லீலா இந்தி பிரபோத்
லீலா இந்தி பிரபோத் பயிற்சி இந்தி மொழியின் அடிப்படை அறிவினைக் கற்பிக்கும் நோக்கமுடையது.இந்த முதல் நிலை இந்திப் பயிற்சி வகுப்பு பயில்வோரை அரசு மொழியில் தங்கள் அன்றாட அலுவல்களை நடத்திச் செல்ல ஆயத்தம் செய்கிறது.இந்த மொழிப்பயிற்சித் தொகுப்பில் எழுத்துகள், சொற் பொருள் தொகுதி, பாடங்கள் ( 51 அலகுகள் ) மற்றும் அகராதி மாட்யூல்கள் அடங்கியுள்ளன.
1. எழுத்துகள் மாட்யூல்
1. பொதுச் சொல்லகராதி ( படங்களுடன் )
2. அமைச்சகங்களின் பெயர்கள்
3. அமைச்சகங்களின் பெயர்கள்
4. அமைச்சகங்களின் பெயர்கள்
1. சொற்பொருள்
2. பயிற்சி 1
3. பயிற்சி 2
4. பயிற்சி 3
5. பயிற்சி 4
6. கலைத்துப்போட்ட எழுத்துகள்
1. நோக்கப்பிரிவு
2. வாக்கிய அமைப்புகள் பிரிவு
3. பாடப்பகுதி பிரிவு
4. புதுச் சொற்கள் பிரிவு
5. சொற்குடும்பப் பிரிவு
6. இலக்கணப் பிரிவு
7. அப்பியாசப் பிரிவு
8. பயிற்சிப் பிரிவு மற்றும்
9. தேர்வுப் பிரிவு
குறிப்பு நீங்கள் பயிற்சித் தொகுப்பின் எந்தப் பகுதிக்கும் செல்ல, மவுசின் வலப்புற கிளிக்கில் அமைந்துள்ள "நேவிகேஷன் மெனு" அல்லது 'சுருக்குவழி மெனு' வையும் பயன்படுத்தலாம். மேலும் விபரங்கள் பெற "FI" ஐ அழுத்தினால் உதவி விண்டோ காட்சியளிக்கும். எந்த இனவகையில் உதவி தேவையோ அதைத் தேர்வு செய்க
4. அகராதி மாட்யூல்
குறிப்பு : இது சிறிய அளவிலான (விரிவான) அகராதி.
லீலா இந்தி பிரவீண்
லீலா இந்தி பிரவீண் என்னும் இந்த இரண்டாவது நிலையிலான முழுமையான பயிற்சி அரசு
மற்றும் பெருவர்த்தக நிறுவன அலுவலர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அன்றாடச் சூழ்நிலைகளில் இந்தி மொழியில் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தேவையான இந்தி
அறிவைப் பெறவும், எழுத்து முறையிலான இந்தியில் நல்ல அடிப்படை மற்றும் செயல்திறன்
மிக்க இலக்கண அறிவைப் பெறவும் உங்களை ஆயத்தம் செய்வது இப்பயிற்சி வகுப்பின் நோக்கமாகும்.
பிரவீண் மொழிப்பயிற்சித் தொகுப்பில் பாடங்கள் ( 27 பாடங்கள் மற்றும் 04 மீள் பார்வைப் பாடங்கள்)மற்றும் அகராதி மாட்யூல்கள் அடங்கியுள்ளன.
1. பாடங்கள் மாட்யூல்கள்
குறிப்பு : இது சிறிய அளவிலான (விரிவான) அகராதி
லீலா இந்தி பிராக்ய
லீலா இந்தி பிராக்ய வகுப்பு இதைப் பயில்பவர்களில் இந்தியில் மத்திய அரசில் வழங்கும்படியான
வரைவுகள் தயாரித்தல், பல்வேறு விதமான அலுவலகக் கடிதப் போக்குவரத்துகள், குறிப்புகள்,
ஆணைகள், குறிப்பாணைகள், விண்ணப்பங்கள், சுற்றறிக்கைகள், அறிவிக்கைகள், அறிக்கைகள்,
நடவடிக்கைக் குறிப்புகள், செயல்முறைகள், தேவைக் கோரிக்கைகள், நினைவூட்டுக் கடிதங்கள்,
இதழ்ச்செய்திக் குறிப்புகள், அரசு அறிவிப்புகள் ஆகியவற்றில் போதிய திறமையை வளர்க்கும்படி
அமைக்கப்பட்டுள்ளது.
இது இந்தியில் பொருத்தமான கலைச்சொற்கள், மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில்
பயில்வோரின் செயல் திறனைக் கூராக்குகிறது.
பயிற்சிப் பாடங்களில் தந்துள்ள பாடப்பகுதிகளும் வருணனைகளும், அலுவலகங்களின்
அமைப்புமுறை, பல்வேறு அலுவலகப் பழக்கங்கள் மற்றும் நடைமுறைகள், அரசாங்கக்
கோப்பு முறைமை, பணி மாதிரிகள், துறைகள் மற்றும் பிரிவுகளுக்கு இடையே வேலைப்
பகிர்வு மற்றும் அலுவலகங்களில் பயன்படும் வெவ்வேறு வகையான கடிதப் போக்குவரத்து
மாதிரிகள், படிவங்கள் இவற்றின் மாதிரி உருவங்கள் குறித்த தகவல்களை நேரடியாகவும்
மறைமுகமாகவும் போதிக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளன
இப்பயிற்சித் தொகுப்பு மத்திய அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள், பொதுத்துறை
நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்,
இந்தி மொழியில் அவர்கள் அடைய வேண்டிய செயலாற்று திறனைப் பெறவும் அரசு
மொழியில் அவர்களில் அரசாங்க அலுவல்களை நிறைவேற்றவும் வேண்டி வடிவமைக்கப்
பட்டுள்ளது.
இந்தப் ப்ராக்ய பயிற்சித் தொகுப்பைப் பயன்படுத்த, பயனர் இந்தி பிரவீண் பயிற்சி வகுப்பை
முடித்திருக்க வேண்டும், அல்லது இந்தியின் பேச்சு மற்றும் எழுத்து நிலையில் ஏறக்குறைய
அதற்குச் சமமான செயலாற்றல் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இப்பாடத்தொகுப்பு இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் பயன்படுத்தலாம்.
இந்தி தாய் மொழியாக இருந்தும் கூட, இந்தியின் அலுவலகப் படிவங்கள், வெளியீடுகள்,
தொழில் நுட்பச் சொற்கள் ஆகியவற்றில் போதிய அறிவு இல்லாத படியால் அலுவலகப்
பணிகளை இந்தியில் நிறைவேற்றுவதற்குப் போதிய ஆற்றல் இல்லாத நிலையில் அவர்களும்
இப்பயிற்சியைப் பயன்படுத்தலாம்.
பிராக்ய பாடவகுப்பு அமைப்பு
இந்தப் பயிற்சி வகுப்பில் 33 பாடங்கள் நான்கு பகுதிகளிலாக வகைப்படுத்தியுள்ளன.
1. மொழி அடிப்படையிலான மீள் பார்வைப் பாடங்கள் ( 1--6 )
2. கடிதப் போக்குவரத்தை வரைவு செய்தல் ( 7--17 )
3. இந்தியில் குறிப்பு வரைதல் ( 18--33 ) மற்றும்
4. அலகுத் தேர்வுகள் ( 1--4 )
குறிப்பு : இது சிறிய அளவிலான (விரிவான) அகராதி
அரசு அலுவலர்கள், பொதுப்படையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மொழிப் பயிற்சித் தொகுப்புகளை உற்சாகமளிப்பதாகவும் எளிதில் பயன்படுத்த வல்லதாகவும் உணர்வார்கள் என நம்புகிறோம். உங்கள் கருத்தளிப்புகளையும் யோசனைகளையும் வரவேற்கிறோம்.
Þï¢î¤¬ò ñø¢ø Þï¢î¤ò ªñ£ö¤è÷¤ù¢ àîõ¤»ìù¢ ðò¤ô Þ颫è è¤÷¤è¢ ªêò¢è